ஹோமகம வரலாறு

வரலாற்று அறிக்கைகளின் பிரகாரம் ஹோமகம முதன்முதலில் சீத்தாவக்க இராஜதானி காலத்தில்தான் குடியேற்ற திட்டமாக இருந்தது. காலனித்துவ ஆட்சியாளர்களால் 18ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் பெருந்தோட்ட கைத்தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்டது அத்துடன் தெங்கு, ரப்பர் மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்கள் என்பன பிரதான பயிர்களாகப் பயிரிடப்பட்டிருந்தன. பாரியளவிலான சுமார் 33 தோட்டங்கள் இருந்தன. அவற்றில் மவுன்ட் கிளிபர்ட், சில்வர் டர்ட்டெஸ்ட், மத்தேகொட பெருந்தோட்டம் என்பவை பிரசித்திபெற்றவையாகும். மேலும் நெற் பயிர்ச்செய்கையும் பரவலாகக் காணப்பட்டது.

ஹோமகம பிரதேசத்தை ஊடறுத்து களனிவெளி புகையிரத பாதை 1908ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஹைலெவல் பாதையை அமைப்பதற்கு முன்னர் கிராமிய விவசாய நடவடிக்கைகளுக்கு காணிகளைப் பயன்படுத்திய சிறிய கிராமங்களுக்கு ஊடாகச் சென்ற சிறிய பாதையின் மூலம் பிரதேசத்தில் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இக் காலப்பகுதியில் ஹோமகம புகையிரத நிலையம் "அழுத்த நகரம்" எனப் பெரிடப்பட்டிருந்தது. கொழும்பு நகரத்தை மையமாகக்கொண்டு பொருளாதார, சமூக, நிருவாக நடவடிக்கைகள் தீவிரமடைந்ததை அடுத்து 1948ஆம் ஆண்டு பிரித்தானிய இனத்தைச் சேர்ந்த நகர அமைப்பாளரான பெட்றிக் அபேகொம்பி சுற்றயல் நகரமாக ஹோமகமவை இனம் கண்டார்.

1963ஆம் ஆண்டில் ஹோமகம 07 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்ட சிறு நகர சபையானது. 1988ஆம் ஆண்டு அது பிரதேச சபையாகியது. அத்துடன் அதில் 106 கிராம சேவையாளர் பிரிவுகள் அடங்கியிருந்தன. 1999ஆம் ஆண்டில் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 91ஆக மட்டுப்படுத்தப்பட்டன.

புவியியல் தகவல்கள்

ஹோமகம பிரதேச சபைக்குரிய பல பிரதேசங்களில் சிவப்பு கலந்த மஞ்சல் நிறமான அமைப்பு கொண்ட மண் காணப்படுகின்றது. மணலும் களிமண் படிமம் கொண்ட கனிய வளங்களுடன் "நைஸ்" கனிம படிமம் கொண்ட மலைகளையும் பிரதேசத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 10 – 20 மிற்றர் பரப்பெல்லையைக் கொண்டுள்ள சுருள் தரை பிரதேசத்தில் உள்ள அடிப்படை புவித் தோற்ற அம்சமாகும்.

பிரதேசத்தின் பொதுவான வருடாந்த வெப்பநிலை பரன்ஹைட் 600 - 800க்கு இடைப்பட்டதாக இருக்கின்றது. வருடத்தின் பொதுவான மழைவீழ்ச்சியின் பிரகாரம் மி.மீ. 2500 - 3000 மற்றும் மி.மீ 3000 - 4000 என பிரதேசத்தை பிரதான இரண்டு வலயங்களாகப் பிரிக்க முடியும். பிரதேசத்துக்கு தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழை அதிகளவில் கிடைக்கிறது. யூலை மாதத்தில் காற்றின் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுவதை அவதானிக்க முடியும். இலங்கையின் அயனமண்டல ஈர வலயத்தில் அமைந்துள்ள ஹோமகம துணை காலநிலையுள்ள மூன்று வலயங்களைக் கொண்டுள்ளது. பிரதேசத்தின் தாவரங்கள் ஈரவலய தாவரங்களாகும்.

FaLang translation system by Faboba
நீதிமன்றங்கள்

  • ஹோமாகம நீதிமன்றம்

Crematoriums

  • பிட்டிப்பான / கிரிபேரிய கெலே
  • ஹபரகட
  • வேத்தர
  • மீகொட, Muthuhenawatta
  • கிரிவத்துடுவ
  • மத்தேகொட
  • நியந்தகல

ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்

  • ஹோமாகம ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்
  • ஜம்புகஸ்முல்ல, கிரிவத்துடுவ ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்
  • வெத்தர ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்
  • பிட்டிப்பான வடக்கு, ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்
  • மத்தேகொட ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்
  • பிராமணகம ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்
  • வெனிவெல்கொல ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்
  • ஆரச்சிகொட ஆயுர்வேத மருத்துவ நிலையங்கள்

விளையாட்டு மைதானங்கள்

  • வில்பிரட் சேனாநாயக்க விளையாட்டு மைதானம்
  • மத்தேகொட விளையாட்டு மைதானம்
  • நியந்தகல விளையாட்டு மைதானம்
  • வெத்தர விளையாட்டு மைதானம்

பாடசாலைகள்

  • ஆனந்த சமரக்கோன் கனிஷ்ட வித்தியாலயம், லியன்வல
  • எம்.டீ.எச். ஜயவர்தன கனிஷ்ட வித்தியாலயம், மாதூலாவ தெற்கு
  • ஹோமாகம மத்திய கல்லூரி
  • மீகொட பெளத்த கனிஷ்ட வித்தியாலயம்
  • மீகொட மகா வித்தியாலயம்
  • மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி
  • Jaltara மகா வித்தியாலயம்
  • பனாகொடை ஸ்ரீ பராக்கிரம மகா வித்தியாலயம்
  • முல்லேகம மகா வித்தியாலயம்
  • பிட்டிபன மகா வித்தியாலயம்
  • பிட்டிபன கனிஷ்ட வித்தியாலயம்
  • மத்தேகொட வித்யாதீப மகா வித்தியாலயம்
  • Deepangoda ஸ்ரீ மேதானந்த மகா வித்தியாலயம்
  • Artigala கனிஷ்ட வித்தியாலயம்
  • மாகம்மன மகா வித்தியாலயம்
  • வேத்தர கனிஷ்ட வித்தியாலயம்
  • வேத்தர மகா வித்தியாலயம்
  • சியம்பலாகொட தர்மபால வித்தியாலயம்
  • பாலாகம ஸ்ரீ பரக்கும் கனிஷ்ட வித்தியாலயம்
  • டபிள்யு.என்.பெரேரா கனிஷ்ட வித்தியாலயம், கஹதுடுவ
  • சிரிபதி கனிஷ்ட வித்தியாலயம், அம்பலாங்கொடை
  • ஜயதிலக்க வித்தியாலயம், கிரிவத்துடுவ
  • தியகம கனிஷ்ட வித்தியாலயம்
  • ஹோமாகம மகா வித்தியாலயம்
  • ஜனாதிபதி கல்லூரி
  • வடரேகா கனிஷ்ட வித்தியாலயம்
  • சிரிபதி கனிஷ்ட வித்தியாலயம்
  • Batawala கனிஷ்ட வித்தியாலயம்
  • இராணுவ கல்லூரி
  • மீகொட தர்மராஜா வித்தியாலயம்
  • லெனகல கனிஷ்ட வித்தியாலயம்
  • ஹபரகட கனிஷ்ட வித்தியாலயம்
  • கிரிவத்துடுவ விஜேவர்தன வித்தியாலயம்
  • தொலஹேன கனிஷ்ட வித்தியாலயம்
  • மாவத்தகம கனிஷ்ட வித்தியாலயம்
  • பிட்டிபன கனிஷ்ட வித்தியாலயம்
  • நியந்தகல வித்யாகீர்த்தி கனிஷ்ட வித்தியாலயம்
  • சங்கராம மத்தும பண்டார கனிஷ்ட வித்தியாலயம்
  • Deepangoda கனிஷ்ட வித்தியாலயம்
  • Subharathi Mahamathya வித்தியாலயம், கொடகம
  • Madoluwawa மகா வித்தியாலயம்
  • Dampe கனிஷ்ட வித்தியாலயம்
  • லியன்வல கனிஷ்ட வித்தியாலயம்
  • Panaluwa கனிஷ்ட வித்தியாலயம்

தொல்பொருளியல் இடங்கள்

  • அம்புல்கம ரஜமஹா விஹாரை
  • Kurugala Shailathanaramaya
  • Kandegala ரஜமஹா விஹாரை
  • லெனகல ரஜமஹா விஹாரை
  • ஸ்ரீ சுந்தர்மராமய - ஹெரலியாவல
  • Maragahaliyadda அணைக்கட்டு

நூலகங்கள்

  • பண்டாரநாயக்க பொது நூலகம் - ஹோமாகம
  • ஸ்ரீ லியனகே நூலகம் - வேத்தர
  • சுகதன் எதிரிசிங்க ஞாபகார்த்த நூலகம் - மீகொட
  • பிலிப் குணவர்தன நூலகம்
  • மத்தேகொட பொது நூலகம்

சிறுவர் பாடசாலை

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் வாழ்கின்ற சிறு பிள்ளைகளில் வளர் இளம் பருவத்தை விருத்திசெய்யும் பொருட்டு ஹோமகம பிரதேச சபை தற்பொழுது இரண்டு சிறுவர் பாடசாலைகளை நடாத்துகின்றது.

  • முனசிங்ககம, மாகம்மன
  • முல்லேகம, ஹபரகட வீதி, ஹோமகம

பொது சந்தைகள்

  • ஹோமாகம
  • மத்தேகொட

Crematories

  • பிட்டிபன / கிரிபேரிய கெலே
  • லியன்வல
  • ஹோமாகம
  • பனாகொட கிழக்கு
  • Panaluwa
  • நியந்தகல
  • மாகம்மன
  • ஹபரகட
  • கொடகம
  • மாதூலாவ
  • பிட்டிபன வடக்கு
  • Dampe
  • பாலாகம
  • குருகல
  • வல்பிட்ட
  • வேத்தர
  • மீகொட, Muthuhenawatta
  • கிரிவத்துடுவ
  • மத்தேகொட
  • பிட்டிபன தெற்கு
  • கஹதுடுவ தெற்கு
  • கஹதுடுவ வடக்கு
  • Jaltara
  • Mabulgoda

பொலிஸ் நிலையங்கள்

  • ஹோமாகம பொலிஸ் நிலையம்
  • கஹதுடுவ பொலிஸ் நிலையம்

தாய்மார்களுக்கான மருத்துவகங்கள்

  • தியகம
  • பிட்டிபன வடக்கு
  • ஒவிட்டிகம
  • கொடகம
  • ஹபரகட
  • Jaltara
  • ஆரச்சிகொட
  • Watereka
  • Artigala
  • Horagala East
  • Horakandawela West (Ruchira Chandana)
  • Dampe

வைத்தியசாலைகள்

  • ஹோமாகம ஆதார வைத்தியசாலை
  • மீகொட ஆயுர்வேத வைத்தியசாலை

வாராந்த சந்தைகள்

  • ஹோமாகம
  • மத்தேகொட
  • வேத்தர