FaLang translation system by Faboba
வாகனங்களுக்கும் விலங்குகளுக்கும் வரி அறவிடல்

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் இவ் வரி கார், லொரி, மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வருகின்ற ஏனைய மோட்டார் வாகனங்களுக்கு ஏற்புடையதாகாது.

பிரதேச சபை குறித்தொதுக்குகின்ற திகதிக்கு முன்னர் அல்லது துணைச் சட்டத்தின் மூலம் குறித்தொதுக்கப்படுகின்ற திகதிக்கு முன்னர் இவ் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் வைத்துக்கொள்ளுகின்ற மற்றும் பயன்படுத்துகின்ற துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகள், கை வண்டிகள், றிக்சோ, குதிரைகள், போனிகள் என்பவை இவ் வரிக்கு உட்படுகின்றன.

நடவடிக்கைமுறை

  • இதற்கென திட்டவட்டமான விண்ணப்பப்படிவமொன்று இல்லை. அத்துடன் பிரதேச சபைக்குச் செலுத்துகின்ற வரி பணத்திற்கு பற்றுச்சீட்டொன்று வழங்கப்படும்.
  • பதிவுசெய்ததற்கு அடையாளமாக உலோக தகடும் பதிவு இலக்கமும் விலங்குக்கு அல்லது வாகனத்திற்கு வழங்கப்படும்.

வரி செலுத்தாதபோது

  • அனுமதிப்பத்திரம் பெறாதவர்களுக்கு பிரதேச சபை அறிவிக்கும்.
  • வாகனம் அல்லது விலங்கின் உரிமையாளர் நீதவான் நீதிமன்றத்தின் முன்கொணரப்பட்டு அபராத தொகையொன்று அறவிடப்படும்.
  • பதிவு இலக்கத்துடனான உலோக தகடைக் காட்சிப்படுத்தாத சந்தர்ப்பத்தில் தலைவர் / செயலாளர் அல்லது அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் அல்லது பொலிஸ் உத்தியோகத்தர் பணிக்கும்போது சமர்ப்பிக்கத் தவறினால் வாகனத்தை / விலங்கை கைதுசெய்ய முடியும். அத்தகைய சந்தர்ப்பத்தில் பொறுப்பாக இருந்த நபர் அல்லது உரிமையாளர் நீதவான் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுவார்.

பின்வரும் வாகனங்களும் விலங்குகளும் வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றன

  • அரசுக்கு அல்லது பிரதேச சபைக்கு சொந்தமான வாகனம்.
  • விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள வாகனம்.
  • மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் உள்ள வாகனங்கள்.

காணி மற்றும் கட்டிடங்களின் உரித்து மாற்றத்தை பதிவுசெய்தல்

பிரதேச சபை சட்டத்தின் 141வது பிரிவின் பிரகாரம் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகள், கட்டிடங்கள் மற்றும் அக் காணிகள் கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு இருப்போர் பிரதேச சபையில் பதிவுசெய்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும். அப் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து காணிகள், கட்டிடங்கள் தொடர்பான அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பிரதேச சபையில் பதிவுசெய்ய வேண்டியது அத்தியாவசியமாகும்.

  • பதிவுசெய்யப்படாத சந்தர்ப்பங்களில் துண்டுகளாகப் பிரிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
  • அத்துடன் பதிவுசெய்யப்படாதபோது கட்டிட அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட மாட்டாது.

கட்டணம்

இதற்காக கட்டணம் அறவிடப்படும். அத்துடன் இக் கட்டணம் சபையின் தீர்மானத்தின் மீது வேறுபடும்.

வழங்க வேண்டிய ஆவணங்கள்

  • நொத்தாரிஸ் அனுமதிபத்திரம் உள்ளவரால் சான்றுப்படுத்தப்பட்ட காணி அல்லது கட்டிட உரித்தின் பிரதி.
  • ஆதன வரி இலக்கம், பெறுமதி மற்றும் காணி அல்லது கட்டிடம் தொடர்பான ஏனைய விபரங்கள்.
  • குறித்த காணியின் அல்லது கட்டிடத்தின் எல்லைகளும் அவற்றை அடையாளம் கண்டது எப்படி என்பதும்.
  • காணியின் அல்லது கட்டிடத்தின் பங்கு உரிமையாளர் இருந்தால் அந்த பங்கு உரிமையாளரின் பெயர் முகவரிகள்.
  • நொத்தாரிஸ் சான்றிதழுடன் உறுதியின் பதிவுசெய்யப்பட்ட பிரதியொன்று.
  • நில அளவை தட்டத்தின் பிரதியொன்று.

நடவடிக்கைமுறை

  • கட்டணம் செலுத்தி விண்ணப்பப்படிவமொன்றைப் பெற்றுக்கொள்தல்
  • விண்ணப்பப்படிவத்துடன் வழங்க வேண்டிய ஏனைய ஆவணங்களை ஒப்படைத்தல்.
  • அதன்போது விண்ணப்பதாரர் வழங்கிய தகவல்கள் சரியானவை என்பதைத் தீர்மானிப்பதற்கு ஆதன வரி ஆவணம் பரிசீலிக்கப்படும்.
  • வெளிக்கள அவதானிப்பை மேற்கொள்ளுதல்.
  • ஆதன வரி ஆவணத்தை திருத்துவதற்கு அனுமதிவழங்குதல்.
  • ஆதன வரி ஆவணத்தை திருத்தி விண்ணப்பதாரருக்கு அறிவித்தல்.

உரிமையாளார் விண்ணப்பப்படிவத்துடன் வழங்கியுள்ள தகவல்கள் ஆதனவரி பதிவேட்டில் உள்ள தகவல்களுடன் பொருந்தாதபோது உரித்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும்படி விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.

சில காணிகளை விற்பனைசெய்வது தொடர்பில் வரி அறவிடல்

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 154வது பிரிவின் பிரகாரம் சில காணிகளை விற்பனைசெய்வதற்கு வரி அறவிட முடியும்.

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றை ஏலவிற்பனையாளர், தரகர் அல்லது அத்தகைய ஒருவரின் ஊழியர் அல்லது பிரதிநிதியொருவர் பகிரங்க ஏலத்தில் அல்லது வேறு முறையில் விற்பனைசெய்கின்ற சந்தர்ப்பத்தில் அவ் விற்பனையாளர் அல்லது தரகர் அல்லது அவருடைய ஊழியர் அல்லது பிரதிநிதி வரியொன்றைச் செலுத்த வேண்டும்.

நடவடிக்கைமுறை

  • காணியை பரிசீலித்தல்.
  • செலுத்த வேண்டிய பணத்தொகையை அறிவித்தல்.
  • அப்பொழுது பணத்தைச் செலுத்தி பற்றுச் சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

14 நாட்களுக்குள் பணம் செலுத்த தவறினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

ஆதன வரி அறவிடல்

ஆதன வரி அறவிடும் நடைமுறை

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரதேசம் முன்னேற்றமடைந்த கிராமமாகப் பிரகடனப்படுத்தப்படும்போது ஆதன வரி அறவிடப்படும்.

ஆதன வரி செலுத்துவதற்கான தகைமை

தமது ஆதனங்கள் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் முன்னேற்றமடைந்த பிரதேசத்தில் அமைந்திருக்கின்றபோது, பின்வருமாறு உரித்தான காணியொன்றில் அல்லது கட்டிடமொன்றில் குடியிருப்பாளராக இருத்தல்.

  • பிரதேச சபை எல்லைக்குள் அசையா சொத்துக்களின் உரிமையாளராக இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள வீடொன்றில், கட்டிடமொன்றில் அல்லது காணியொன்றில் வாடகைக்கு இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அரசாங்கத்துக்கு உரிய வீடொன்றில், கட்டிடமொன்றில் அல்லது காணியொன்றின் உரிமையாளராக இருத்தல்.
  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அசையா சொத்துக்களின் பங்கு உரிமையாளராக (சம பங்கு உரிமையாளர்) இருத்தல்.

இதன்போது,

  • தமது சொத்தின் பெறுமதியில் 7% ஆதன வரியாகச் செலுத்த வேண்டும்.
  • குறித்த வருடத்தின் முதல் மாதத்தில் ஆதன வரி செலுத்தும்போது 10% கழிவு உரிமையாளருக்கு கிடைக்கும்
  • காலாண்டுக்குச் செலுத்த வேண்டிய தொகையை குறித்த காலாண்டின் முதல் மாதத்தில் செலுத்தும்போது 5% கழிவு வழங்கப்படும்.
  • அவ்வாறின்றேல் குறித்த ஆண்டில் 4 காலாண்டுக்கு காலாண்டு காலாண்டாகவும்கூட ஆதனவரியைச் செலுத்த முடியும்.
  • ஆதன வரி நடைமுறைப்படுத்தப்படுகின்ற பிரதேசத்தில் காணி பகுதியொன்றைக் கொள்வனவு செய்கின்ற ஒருவர் அதற்கான புதிய ஆதன வரி இலக்கமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.(உறுதி சுருக்கமொன்றைச் சமர்ப்பிப்பதன்மூலம்)
  • தற்பொழுது ஆதன வரி இலக்கம் உள்ள ஒருவரின் முழு சொத்தையும் பொறுப்பேற்கின்ற ஒருவர் எனில் உறுதி சுருக்மொன்றைச் சமர்ப்பித்து பிரதேச சபை ஆதன வரி பதிவேட்டில் தமது பெயரைச் சேத்துக்கொள்ள வேண்டும்.
  • ஆதன வரி பதிவேட்டில் பெயரைத் திருத்துவதற்கு அல்லது புதிய ஆதன வரி இலக்கமொன்றைப் பெற்றுக்கொள்ளுவதற்கு உரிய உறுதி சுருக்க படிவத்தை கட்டணம் செலுத்தி பிரதேச சபை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அந்த உறுதி சுருக்க படிவத்தை, தமது உறுதியைச் சமர்ப்பித்து நொத்தாரிஸ் ஒருவரைக் கொண்டு நிரப்பி சான்றுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அவ்வாறு நிரப்பிக்கொண்ட படிவத்தை அதன் பிரதியொன்றுடன் நிள அளவை வரைபடத்தின் 2 பிரதிகளுடன் அலுவலகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அப்பொழுது உங்கள் பெயர் ஆதன வரி செலுத்துபவராகப் பதியப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை சபையின் ஆதன வரி பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

தற்பொழுது ஆதன வரி அறவிடுகின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

ஹபரகட வடக்கு (ஒருபகுதி) சித்தமுல்ல தெற்கு ஹபரகடவத்த
சித்தமுல்ல வடக்கு கெஹனுவல (ஒருபகுதி) குடமாதூவ
மீகொட வடக்கு (ஒருபகுதி) தீப்பங்கொட பனாகொட நகரம்
கித்துலஹேன கொடகம வடக்கு சங்காராம
கொடகம தெற்கு ரலாவல பிட்டிபன நகரம்
சியம்பலாகொட வடக்கு பிட்டிபன வடக்கு (ஒருபகுதி) சியம்பலாகொட தெற்கு
கிரிபேரிய கெலே (ஒருபகுதி) வேத்தர ஹோமாகம வடக்கு
ஹெரலியாவல ஹோமாகம தெற்கு பாலாகம
ஹோமாகம கிழக்கு உந்துறுகொட ஹோமாகம மேற்கு
வெனிவெல்கொல ஹோமாகம நகரம் கஹதுடுவ வடக்கு
கட்டுவான (ஒருபகுதி) கஹதுடுவ தெற்கு கலவிலவத்த தெற்கு
கஹதுடுவ கிழக்கு கலவிலவத்த வடக்கு கஹதுடுவ மேற்கு
மாதூலாவ வடக்கு (ஒருபகுதி) கிரிவத்துடுவ வடக்கு லியன்வல (ஒருபகுதி)
கித்துலவில மத்தேகொட (மத்தி பீ) மூணமலே
மத்தேகொட மேற்கு லியன்வல (ஒருபகுதி) மத்தேகொட (மத்தி ஏ)
மாதூலாவ வடக்கு (ஒருபகுதி) மத்தேகொட கிழக்கு கிரிகம்பமுனுவ
தியகம கிழக்கு மாகம்மன கிழக்கு தியகம மேற்கு
மாகம்மன மேற்கு    

மக்கள் கவனத்திற்காக பிரசார அறிவித்தல்களை வெளியிடுவதற்கு அனுமதியளித்தல்

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் மற்றும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட துணை நியதிச் சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபை எல்லைக்குள் திறந்த வெளியிடமொன்றில்  பொதுமக்கள் பார்க்கக்கூடியவாறு பொருத்தப்படுகின்ற எந்தவொரு விளம்பர அறிவித்தலுக்கும் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

  • எந்தவொரு சொல், கடிதம், இலக்கம், சமிக்ஞை, இடம், பலகை, அறிவிப்பு, கருவி, சுவரொட்டி அல்லது துண்டுப் பிரசுரம் போன்றவற்றில் எந்தவொன்றையும் காட்சிப்படுத்துதல் அல்லது சமர்ப்பித்தல் முழுமையாக அல்லது பாதியாக விளம்பரப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு எந்தவொரு காணியில், கட்டிடத்தில் கட்டமைப்புக்கு மேலே தொங்கவிடல் விளம்பர பிரசாரமாகும்.
  • விளம்பர அறிவித்தல்களின் தன்மைக்கு ஏற்ப அனுமதிப்பத்திர கட்டணம் தீர்மானிக்கப்படும். அத்துடன் சபை முன்கூட்டியே தீர்மானித்த விகிதாசாரத்துக்கு அமைய அத்தீர்மானம் எடுக்கப்படுகிறது.

பின்வரும் சந்தர்ப்பங்களில் அனுமதிப்பத்திர கடடணங்களிலிருந்து விலக்களிக்கப்படுகிறது,

  • விளம்பர அறிவித்தல் புண்ணிய நோக்கத்திலான பொழுதுபோக்கு நடவடிக்கையானால், பொதுமக்கள் கண்காட்சி நடைபெறுகின்ற இடத்தில் காட்சிப்படுத்தப்படுகின்ற விளம்பர அறிவித்தல்
  • அரசாங்கத்தால் பொருத்தப்பட்டுள்ள விளம்பர அறிவித்தல்
  • மத நிறுவனங்களின் சொத்துக்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வியாபாரமல்லாத விளம்பர பலகை
  • எந்தவொரு கட்டிடத்திலும் யன்னலுக்கு அருகில் வைத்துள்ள விளம்பர அறிவித்தல். விற்பனைக்கு உண்டு,
  • வாடகைக்கு கொடுப்பதற்கு என்றவகையில் குறிப்பிட்டு குறித்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவித்தல்கள்
  • மனை பெயர் பலகைகள்
  • தொழில்சார்ந்தவர்கள் பயன்படுத்துகின்ற ஒரு சதுர அடிக்கு குறைந்த பெயர்ப்பலகைகள்

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

  • பாரிய திறந்தவெளி விளம்பர பலகைகள் தொடர்பில், அவ் அறிவித்தல் ஸ்தாபிக்கப்படுகின்ற இடத்தில் 1:1000 க்கு குறையாத அளவில் வரையப்பட்ட திட்டம்.
  • அளவு குறைவாக வரையப்பட்ட விளம்பர அறிவித்தல் பிரதியொன்று

விண்ணப்பிக்கும் நடவடிக்கைமுறை

  • அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பித்து செயலாளருக்கு ஒரு கடிதம் சமர்ப்பித்தல்
  • விளம்பர அறிவித்தலை ஸ்தாபிப்பதற்கு 7 நாட்களுக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
  • நிரந்தர அறிவித்தலுக்காக இடத்தைப் பரிசோதித்ததன் பின்னர் அறிவித்தலின் சதுர அடி அளவின் பிரகாரம் கட்டணம தீர்மானிக்கப்படும்.
  • விண்ணப்பப்படிவ மற்றும் அனுமதிப்பத்திர கட்டணம் அறவிடப்பட்டதன் பின்னர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

அதன்போது பின்வருமாறு செயலாற்ற வேண்டும்.

  • அனைத்து விளம்பர அறிவித்தல் பலகைகளில் அனுமதிப்பத்திர இலக்கமும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட திகதியும் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
  • அனுமதிப்பத்திரம் வைத்திருப்பரின் பெயரும் முகவரியும் விளம்பர அறிவித்தலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
  • பதாகை தொடர்பில், பிரதேச சபை தலைவரின் முத்திரை பதாகையில் இருக்க வேண்டும்.

சாரதிகளின் கவனத்திற்கு இடையூறு விளைவிக்காத இடத்தில் விளம்பர அறிவித்தல் வைக்கப்பட வேண்டும். அது கண்களைப் பாதிக்காதவகையில் இருக்க வேண்டும்.

வியாபார அனுமதிப்பத்திரம் வழங்கல்

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 149வது 1பிரிவு மற்றும் 952ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவன (ஏற்றுக்கொள்ளப்பட்ட துணைவிதி) சட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட துணைவிதிகளில் குறிப்பிடப்பட்ட வியாபாரங்களுக்கு வியாபார அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய வியாபாரங்கள்

  • விடுதி இல்லங்கள்
  • ஹோட்டல்கள்
  • சோற்றுக் கடை, சிற்றுண்டிச் சாலைகள் தேநீர் அல்லது கோப்பி கடை
  • பேக்கரி (வெதுப்பகம்)
  • பசுப்பண்ணை மற்றும் பால் வியாபாரம்
  • உணவு விற்பனை
  • மீன் விற்பனை
  • இறைச்சி விற்பனை
  • அபாயகரமானதும் அருவறுப்பானதுமான வியாபாரம் (சபையினால் வெளியிடப்பட்டது)
  • ஏனைய தொழிற்சாலைகள்
  • குளிர்பான தொழிற்சாலை
  • லொன்டரி
  • சுற்றுலாத்துறை வர்த்தகம்
  • ஊன் அறுக்கும் நிலையம்
  • பொது சந்தைகள்
  • சிகை அலங்கார நிலையம்

இதற்கு மேலதிகமாக 1952ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவன (ஏற்றுக்கொள்ளப்பட்ட துணைவிதி) சட்டத்தின் பிரகாரம் அபாயகரமானதும் அருவறுப்பானதுமான வியாபாரத்திற்கு மேலதிகமாக சபை வருடாந்தம் விதிக்கின்ற வியாபாரத்திற்காகவும் வியாபார அனுமதிப்பத்திரத்தைப் பெறறுக்கொள்ள வேண்டும்.

இதற்காக சபையினால் வழங்கப்படுகின்ற விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும்.

கட்டணம்

  • ரூ. 1000.00 அல்லது அதற்குக் குறைந்த தொகை. (வியாபாரத்தின் வருடாந்த பெறுமதியின் அடிப்படையில்) வியாபார அனுமதிப்பத்திர கட்டணமாக அறவிடப்படும்.
  • வியாபார அனுமதிப்பத்திரம் மற்றும் கைத்தொழில் வரி அறவிடப்படாத வியாபாரங்களுக்கு வியாபார வரி அறவிடப்படும்.

நடவடிக்கை முறை

  • பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து வியாபாரங்களுக்கும் விண்ணப்பப்படிவமொன்றை வழங்குதல்.
  • பூர்த்திசெய்த விண்ணப்பப்படிவங்களைச் சேகரித்தல்.
  • விண்ணப்பதாரர் வழங்கிய தகவல்களின் செல்லுபடியாகும் தன்மையைப் பரீட்சித்தல்.
  • பொது சசுகாதார பரிசோதகரின் அங்கீகாரத்துக்கு அனுப்புதல்
  • கள அவதானிப்பை மேற்கொள்தல்
  • குறைபாடுகள் இல்லாவிட்டால் அனுமதிப்பத்திரத்துக்குப் பரிந்துரைசெய்தல்.
  • அனுமதிப்பத்திர கட்டணத்தை அறவிட்டதன் பின்னர் அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

பொது சுகாதார பரிசோதகரின் அங்கீகாரம் கிடைக்காதபோது,

  • விண்ணப்பப்படிவத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி விண்ணப்பதாரருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படும்.
  • மேற்படி குறைபாடுகளைத் திருத்தி பிரதேச சபைக்கு அறிவிக்க வேண்டும்.
  • மீண்டும் மேற்கொள்ளப்படுகின்ற நிலைய பரிசீலனையின் பின்னர் வியாபாரம் அனைத்து சுகாதார சட்டங்களையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருந்தால் அங்கீகாரம் வழங்கி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வியாபார அனுமதிப்பத்திரமொன்றைப் பெறாதபோது

  • வியாபார அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ளும்படி வியாபாரத்தின் உரிமையாளருக்கு எச்சரிக்கை செய்யப்படும்.
  • அறிவித்தல் வழங்கி 7 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளாவிடடால் நீதவான நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

கைத்தொழில் வரி செலுத்தும் நடவடிக்கைமுறை

  • நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து வியாபார நிலையங்களுக்கும் இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும்.
  • விண்ணப்பப்படிவங்கள் மீண்டும் சேகரித்துக்கொள்ளப்படும்.
  • வருடாந்த பெறுமதியின் அடிப்படையில் ரூ.1000.00 வரையிலான வரி அறவிடப்படும்.
  • வரி செலுத்தியதன் பின்னர் அதற்கான பற்றுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் வரி தீர்மானிக்கப்படுவது,

  • வியாபாரத்தின் வருடாந்த பெறுமதி
  • வியாபாரம்
  • சேரும் இலாபம்
  • வியாபாரத்தின் மூலம் விநியோகிக்கப்படுகின்ற உற்பத்திகளின் அத்தியாவசியமான தன்மைகளின் அடிப்படையில்

வியாபார வரி செலுத்தாதபோது

  • வியாபாரத்தின் உரிமையாளாருக்கு அறிவித்தலொன்று வழங்கப்படும்.
  • அறிவித்தலுக்கு பதிலளித்து கொடுப்பனவைச் செலுத்தாதபோது நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரமுடியும்.

வியாபார வரி செலுத்துதல்

வியாபார அனுமதிப்பத்திரம் அல்லது கைத்தொழில் வரி செலுத்த வேண்டியதல்லாத வியாபாரங்களுக்கு வரி செலுத்த வேண்டும்.

1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 152வது பிரிவின் பிரகாரம் கடந்த ஆண்டின் வருமானத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த வரி விதிக்கப்படுகிறது.

வருமானம் வரி
ரூ. 6000.00 மேற்படாதபோது இல்லை
ரூ. 6000.00க்கு மேல் ரூ. 12000.00 க்கு குறைய ரூ. 90.00
ரூ. 12000.00க்கு மேற்படுகிற ரூ. 18750.00 மேற்படாத ரூ.180.00
ரூ. 18750.00க்கு மேற்படுகிற ஆயினும் ரூ. 75000.00க்கு மேற்படாதபோது ரூ. 360.00
ரூ. 75000.00க்கு மேற்படுகிற ஆயினும் ரூ. 150000.00க்கு மேற்படாதபோது ரூ. 1200.00
ரூ. 150000.00க்கு மேற்படுகிறபோது ரூ. 3000.00

விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்திசெய்து அலுவலகத்திற்கு ஒப்டைத்ததன் பின்னர் வரி பணத்தைச் செலுத்த முடியும்.

பிரதேச சபைக்குச் சொந்தமான கடை அறைகளை குத்தகைக்கு கொடுத்தல்

பிரதேச சபை சட்டத்தின் 119வது பிரிவின் பிரகாரம் மற்றும் 1980.12.31ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற ஆணையாளரால் வெளியிடப்பட்ட 1980-46ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் கடை அறைகளை அமைத்து ஒரு சேவையாக பொதுமக்களுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் உண்டு.

கட்டணம்

  • பிரதேச சபையினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் திர்மானிக்கப்படுகின்ற  தொகைக்கு வியாபார கடை அறைகள் வழங்கப்படும்.
  • தெரிவுசெய்யப்படுகின்ற விண்ணப்பதாரர்கள் 3 மாத தவணைக்கு சமமான ஒரு தொகையை பாதுகாப்பு தொகையாக வைப்பிலிட வேண்டும்.
  • பிரதேச சபை தீர்மானிக்கின்ற கட்டணத்திற்கு கேள்விப்பத்திர ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பிக்கும் நடவடிக்கைமுறை

  • பத்திரிகை அறிவித்தல்மூலம் விளம்பரப்படுத்துதல்.
  • கேள்விப்பத்திர ஆவண கட்டணத்தைச் செலுத்தியதன் பின்னர் கேள்விப்பத்திர விண்ணப்பங்களை சபை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுதல்.
  • கட்டணத்தையும் மீளச் செலுத்தும் வைப்பை செலுத்துதல்.
  • கட்டணத்தையும் மீளச் செலுத்தும் வைப்புத் தொகையையும் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டுடன் கேள்விப்பத்திர விண்ணப்பங்களை கேள்விப்பத்திர பெட்டியில் இடுதல் அல்லது பதிவுத் தபாலில் அனுப்புதல்.
  • ஆகக்கூடிய விலைகூறலை முன்வைக்கின்ற விண்ணப்பதாரருக்கு வியாபார கடை அறைகளை குத்தகைக்கு எடுக்கும் சந்தர்ப்பம் கிட்டும்.
  • வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் பாதுகாப்பு வைப்புத் தொகையையும் அடிப்படை பணச் செலுத்தலையும் செலுத்தி முறையாக ஒப்பந்தம் செய்துகொண்டதன் பின்னர் கடை அறைகளை பொறுப்பேற்றுக்கொள்ள முடியும்.
  • வியாபார அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்.

தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறுகின்றபோது,

  • இறுதி அறிவித்தலை அனுப்புதல்
  • ஒப்பந்த காலம் முடிவடைந்ததன் பின்னர் உடைமையை மீளப்பெற்றுக்கொள்ளுவதற்காக சட்ட நடவடிக்கை எடுப்பது சம்பந்தமான ஆவணங்களை உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு அனுப்ப வேண்டும்.

உடைமையை மீள சுவீகரித்துக்கொண்டதன் பின்னர்,

  • அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனத்தின் பணத்தைச் செலவிட்டு பழைய விற்பனைக்கூடங்களுக்குப் பதிலாக புதிய விற்பனைக்கூடங்களை நிர்மாணிக்கின்ற சந்தர்ப்பங்களில் பழைய விற்பனைக்கூடங்களில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் புதிய விற்பனைக்கூடங்களில் வாடகை குடியிருப்பாளர்களாகத் தெரிவுசெய்யப்படுவார்கள்.
  • வர்த்க வங்கியொன்றில் பணம் கடனுக்குப் பெற்று பழைய விற்பனைக்கூடங்களுக்குப் பதிலாகப் புதிய விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் பழைய மற்றும் புதிய வாடகை குடியிருப்பாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
  • குத்தகைக்கு எடுத்தவரின் கோரிக்கையின்மீது அல்லது அவர் இறந்ததன் காரணமாக குத்தகையை அவருடைய/அவளுடைய கணவன்/மனைவி அல்லது மகன்/மகள் என்பவருக்கு மாற்ற முடியும். அத்துடன், அவ்வாறு நடைபெற வேண்டுமானால் செயலாளரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.

சமூக நிலைய அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்தல்

1975ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சமூக நிலைய அனுமதிப்பத்திரம் வழங்கும் சட்டம் மற்றும் அதில் செய்யப்பட்ட திருத்தத்தின் பிரகாரம் ஏதேனும் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள சமூக நிலையம் அப் பிரதேச சபையில் பதிவுசெய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

கட்டணம்

பிரதேச சபை அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும்.

அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்க வேண்டிய ஆவணங்கள்

சமூக நிலைய தலைவரினால் கையொப்பமிடப்பட்ட அதன் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் பட்டியல் மற்றும் விண்ணப்பப்படிவத்துடன்,

  • விண்ணப்பதாரரின் பெயர்
  • விண்ணப்பதாரரின் முகவரி
  • விண்ணப்பதாரர் தலைவர், செயலாளர் அல்லது முகாமையாளர் ஆகிய பதவிகளில் எப்பதவியை வகிக்கின்றார் என்பது.
  • சமூக நிலையத்தின் பெயர்
  • சமூக நிலையம் நடத்தப்படுகின்ற இடத்தின் முகவரி
  • சமூக நிலையத்தின் செயற்பாடுகள்
  • தலைவர், செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வகிக்கின்றவர்களின் பெயர்கள்
  • அங்கத்தினர்களின் எண்ணிக்கை

மேற் குறிப்பிட்ட தகவல்களை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும்.

அதன் பின்னர் மேற்கொள்கின்ற எதிர்கால நடவடிக்கை தொடர்பில் பிரதேச சபை அலுவலகத்தில் விசாரித்து அறிந்துகொள்ள முடியும்.

பகிரங்க அரங்கக் காட்சிகளைக் காட்டுவதற்கான அனுமதிப்பதிரம் பெற்றுக்கொள்தல்

இதன்போது, களியாட்டங்கள் மற்றும் சர்க்கஸ், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் வித்தை (மெஜிக்) காட்சிகள், விளையாட்டு, நடனம், மல்யுத்தம், நீச்சல் விழா என்பவற்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது.

1912ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பகிரங்க அரங்க காட்சிகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திரைப்படங்கள் அல்லது மேடை நாடகங்கள் போன்ற வகைகளின் கீழ் வராத எந்தவொரு காட்சிக்கும் பகிரங்க அரங்க காட்சி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்காக,

  • விண்ணப்பப்படிவமொன்றை, கட்டணம் செலுத்தாமல் பிரதேச சபையிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • கட்டணம் ஒன்றைச் செலுத்துவதன் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது.(கட்டணம் காலத்துக்கேற்றவகையில் சபையினால் தீர்மானிக்கப்பட்டதாகும்)
  • மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது தொடர்பில் பிரதேச சபை தலைவர் தீர்மானம் எடுப்பார்.

களியாட்ட வரி அறவிடல்

1946ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க களியாட்ட கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பொதுமக்கள் கண்காட்சிகள் களியாட்ட வரிசெலுத்த கட்டுப்பட்டுள்ளன. இவ் வரி அனைத்து கண்காட்சி நுழைவுச் சீட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, மத, கல்வி மற்றும் தரும கைங்கரியங்களுக்கான காட்சிகளைத் தவிர்த்து ஏனைய அனைத்து கண்காட்சிகளுக்கும் இவை அறவிடப்படும்.

கட்டணம்

  • களியாட்ட வருமானமாக அறவிடுகின்ற வருமானத்தில் 10% சதவீதமாகும்
  • பொதுமக்கள் காட்சி தொடர்பாகப் பொறுப்புவகிக்கின்ற நபர்/நபர்கள் இந் நுழைவுச் சீட்டின் விலையில் உள்ளடக்குகின்றார்கள்.

நடவடிக்கைமுறை

  • பிரதேச சபை தலைவரின் முத்திரை அனைத்து நுழைவுச்சீட்டுகளிலும் இடப்பட்டிருத்தல் வேண்டும்.
  • சினிமா திரையரங்குகள் அல்லாத ஏனைய கண்காட்சிகளுக்கு இம் முத்திரையை இடுகின்றபோது குறித்த வரிப் பணத்தை பிரதேச சபை செலுத்த வேண்டும். இதை பாதுகாப்பு பணமாக வைத்துக்கொள்கின்ற அதேவேளையில் கண்காட்சியின் முடிவில் விற்பனையாகாத நுழைவுச் சீட்டுக்களுக்கு அறவிட்ட பணம் மீளளிக்கப்படும்.
  • பொதுமக்கள் காட்சி தொடர்பாகப் பொறுப்புவகிக்கின்ற நபர்/நபர்கள் விற்பனையான நுழைவுச் சீட்டு தொடர்பான தினசரி அறிக்கையொன்றை வைத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு காட்சிக்காக விற்பனையான நுழைவுச் சீட்டுக்களை சபையின் வருமான பரிசோதகர் / வருமான கட்டுப்பாட்டாளர் பரிசீலனைக்குட்படுத்துவார்.
  • திரைப்படக் காட்சிக்கு தினசரி அறிக்கையின் பிரகாரம் விற்பனையான நுழைவுச் சீட்டுக்களின் எண்ணிக்கையை கவனத்தில் எடுத்து செலுத்த வேண்டிய வருமானத்தில் 10% வரித் தொகை தினசரி அறவிடப்படும்.
  • களியாட்ட வரி செலுத்தத் தவறினால் நீதவான் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர முடியும்.

தெருவெல்லை சான்றிதழை வழங்குதல்

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகளின் ஒரு பகுதியை நிதி நிறுவனமொன்றுக்கு ஈடுவைத்து கடன் பெற்றுக்கொள்கின்றபோது அக் காணிக்கு பிரதேச சபை வழங்குகின்ற தெருவெல்லை சான்றிதழ் தேவைப்படும். தெருவெல்லையை மீறி அமைத்துள்ள கட்டிடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் இருப்பது இச் சான்றிதழில் உள்ள முக்கிய அம்சமாகும்.

தகைமை

  • குறித்த கட்டிடம் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்திருக்க வேண்டும்.

இதற்காக,

  • கட்டணம் செலுத்தி விண்ணப்பப்படிவமொன்றை பிரதேச சபை அலுவகத்தின் ஆதன வரி பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • விண்ணப்பப்படிவத்தை, காணி வரைபடத்தின் மூலப் பிரதியை இரண்டு பிரதிகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதன்போது விண்ணப்பதாரர் வரி, அனுமதிப்பத்திர கட்டணம் அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட கட்டணங்களை நிலுவையாக வைத்திருக்கவில்லை என்பதற்கு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அவ்வாறு நிலுவையாக இருந்தால் அப் பணத்தையும் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர் சமர்ப்பித்துள்ள வரைபடத்தின் மூலப்பிரதிகளிலும் இணை பிரதிகளிலும் வீதி ரேகை அடையாளமிடப்பட்டதன் பின்னர் தெருவெல்லை சான்றிதழ் வழங்கப்படும்.
  • சகல ஆதன வரிகளும் செலுத்தி முடிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

சுவீகரிக்கப்படாமை சான்றிதழை வழங்குதல்

ஏதேனும் ஒரு பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணிகளின் ஒரு பகுதியை பிணைப்பொறுப்பாக நிறுவனமொன்றுக்கு ஈடுவைத்து கடன் பெற்றுக்கொள்கின்றபோது அக் காணியை பிரதேச சபை சுவீகரிக்கவில்லை என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இது சுவீகரிக்கப்படாமை சான்றிதழ் எனக் குறிப்பிடப்படும்.

இச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்காகப் பின்வரும் தகைமைகளைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும்.

  • காணி அல்லது சொத்து பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்திருக்க வேண்டும்.
  • ஆதன வரி நிலுவையில்லாமல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • காணி அல்லது சொத்து தெருவெல்லை மீது அமைந்திருத்தலாகாது.

இதற்கு அவ்வப்போது சபை விதிக்கின்ற கட்டணம் அறவிடப்படும்.

இதற்காக வழங்க வேண்டிய ஆவணங்கள்,

  • காணி உறுதியினதும் வரைபடத்தினதும் பிரதி
  • கட்டாய தகவல்கள்
    • வீதியின்/ பாதையின் பெயர்
    • ஆதன வரி இலக்கம்
    • அமைவிடம்
    • உரிமையாளரின் பெயர்
    • உறுதி இலக்கமும் திகதியும்
    • வரைபட இலக்கமும் திகதியும்

இவ் அனைத்து தகவல்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் பிரதேச சபையின் தலைவர்/செயலாளர் கையொப்பமும் முத்திரையும் இட்ட சுவிகரிக்காத சான்றிதழ் வழங்கப்படும்.

சொத்துக்களை மதிப்பீடு செய்தல்

  • பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் ஏதேனும் சொத்து ஒன்றை மதிப்பீடுசெய்துகொள்ள வேண்டுமானால் மதிப்பீட்டு திணைக்கத்தின் மூலம் அம் மதிப்பீட்டு பணிகளைச் செய்வித்துக்கொள்ளப்படுகின்றது.
  • பிரதேச சபையின் மூலம் கட்டிடமொன்றுக்கு இணங்கல் சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னர் அக் கட்டிடங்களின் வருடாந்த பெறுமதி அண்ணளவாக மதிப்பீடு செய்யப்படும்.
  • ஏல விற்பனையாளர் ஒருவரால் பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றைப் பகுதியாகப் பிரித்து விற்பனை செய்கின்றபோது குறித்த வரிப் பணத்தை அறவிடுவதற்காக அச் சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்படும்.
  • அதிகார பிரதேசத்தில் நடத்தப்படுகின்ற அனைத்து கைத்தொழில்கள் மற்றும் வியாபாரங்களிலிருந்து வருடாந்த அனுமதிப்பத்திர கட்டணம் அல்லது வியாபார வரியை அறவிடுவதற்கும் சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றது.
  • சொத்தொன்றை சுவீகரிக்கின்றபோதும் அச் சொத்தின் பெறுமதி மதிப்பீடு செய்யப்படுகின்றது.

இத்தகைய பணிகளின்போது மேற்கொள்ளப்படுகின்ற சொத்துக்களை மதிப்பீடு செய்வது தொடர்பாக மேலதிக தகவல்களை சபையின் வருமான பரிசோதகர் அல்லது வருமான கட்டுப்பாட்டாளர் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.