saba photo

பிரதேச சபையினால் தமது அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து நிர்மாண நடவடிக்கைகளின் கட்டுப்பாடும் ஒழுங்குபடுத்தலும் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிரகாரம் ஹோமாகம பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுகின்ற அனைத்து நபர்களும் இப் பிரதேச சபையிடமிருந்து அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஹோமாகம பிரதேச சபை அதிகார பிரதேசம் 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அச் சட்டதிட்டங்களின் பிரகாரம் நிர்மாண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்டிட திட்டங்களை அங்கீகரிக்கும் நடவடிக்கை

  • கட்டிட விண்ணப்ப படிவமொன்றை (ரூ. 300.00/= + பெறுமதிசேர் வரி) பணம் செலுத்தி பிரதேச சபை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் அங்கீகரிக்கப்படுவதற்குள்ள கட்டிடத்தின் வரைபடம், அதன் 3 போட்டோ பிரதிகள், அங்கீகரிக்கப்பட்ட காணி வரைபடம், காணி உறுதி என்பவற்றையும் கட்டிட பிரிவுக்கு வழங்கி கட்டிடத்தின் சதுர அடி அளவுக்கு ஏற்ப (இது தொடர்பான விபரங்கள் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) பணம் செலுத்தி பற்றுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் சபையின் தொழில்நுட்ப அதிகாரி/ பொது சுகாதார பரிசோதகர் குறித்த இடத்தைப் பரிசோதிப்பார். அத்துடன் அவர்களின் பரிந்துரையுடன் அக் கோவைகள் திட்டமிடல் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அனுமதி வழங்கப்படும்.
  • அங்கீகரித்த முத்திரையிடப்பட்டதன் பின்னர் குறித்த அங்கீகரித்த வரைபடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    (மேலதிக விபரங்கள் அவ் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது)
FaLang translation system by Faboba