saba photo

 

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் மேற்கொள்ளப்டுகின்ற அனைத்து காணி அபிவிருத்தி மற்றும் காணிகளை துண்டுகாளாகப் பிரித்தல் என்பவை முதலில் பிரதேச சபையில் பதிவுசெய்யப்படுதல் வேண்டும். நகர பிரதேசங்களில் காணிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

தகைமைகள்

  • பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள துண்டுகளாகப் பிரிப்பதற்கு அல்லது அபிவிருத்தி செய்யப்படவுள்ள காணியின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
  • The owner should possess a registered deed.

காணி துண்டுகளை அனுமதிக்கும் நடவடிக்கை

  • காணி துணை பிரிப்பு விண்ணப்பப்படிவமொன்றை (ரூ.300.00/= + பெறுமதிசேர் வரி) பணம் செலுத்தி பிரதேச சபை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுதல்.
  • பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் அங்கீகரிக்கப்படவுள்ள காணியின் வரைபடம், அதன் 3 போட்டோ பிரதிகள்,  மூல திட்டங்களின் பிரதிகள், குறித்த காணி உறுதியின் பிரதி என்பவற்றைக் கட்டிட பிரிவுக்கு வழங்கி காணியின் துண்டுகளின் பிரகாரம் (இது பற்றிய விபரம் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) பணம் செலுத்தி பற்றுச் சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் காணியைப் பரிசோதிப்பார். அத்துடன் அக் கோப்புகளை திட்டமில் குழுவுக்கு சமர்ப்பித்ததன் பின்னர் அங்கீகாரம் அளிக்கப்படும்.
  • அங்கீகரிக்கப்பட்ட முத்திரை இடப்பட்டதன் பின்னர் குறித்த அங்கீகார திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    (மேலதிக விபரங்கள் அவ் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது)
FaLang translation system by Faboba