saba photo

இச் சான்றிதழ் ஏதேனும் கட்டிடமொன்று அங்கீகரிக்கப்பட்ட நிலஅளவை திட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காக வழங்கப்படுகின்றது. கட்டிடம் அமைக்கப்பட்டதன் பின்னர் அதில் குடியேறுவதற்கு முன்னர் பிரதேச சபையிடமிருந்து இதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்காக,

  • அலுவலகத்தில் (ரூ. 200.00/= + பெறுமதிசேர் வரி) பணம் செலுத்தி விண்ணப்பமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக கட்டிடத்தின் சதுர அடி அளவின் பிரகாரமும் ஒரு தொகை பணத்தைச் செலுத்த வேண்டும்.
  • ஒரு வருடத்தில் நிர்மாண பணிகளைப் பூர்த்திசெய்ய முடியாவிட்டால் காலத்தை நீடித்துக்கொள்ள வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் செல்லுபடியான காலம் 3 வருடங்களைக் கடந்திருந்தால் குறித்த அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் பிரதியொன்றுடன் புதிய விண்ணப்படிவத்துடன் மீண்டும் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப உத்தியோகத்தர் அல்லது பொது சுகாதார பரிசோதகர் பரிந்துரை செய்ததன் பின்னர் திட்டமில் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.
  • குழுவின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் இணக்கச் சான்றிதழ் வழங்கப்படும்.
FaLang translation system by Faboba