FaLang translation system by Faboba
ஆபத்தான மரங்களை அகற்றுதல்

மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி பாதைக்கு அல்லது வீட்டுக்கு சேதமேற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் பிரதேச சபை இதன்பொருட்டு நடவடிக்கை எடுக்கும். இதன்போது பிரதேச தலைவருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து பிரதேச சபையின் செயலாளருக்கு விண்ணப்பமொன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். மரம் அல்லது மரத்தின் கிளைகள் 14 நாட்களுக்குள் அகற்றப்படாவிட்டால், அதை அகற்றி அதற்கான செலவை மரத்தின் உரிமையாளரிடமிருந்து அறவிட்டுக்கொள்ள தலைவருக்கு அதிகாரம் உண்டு.

இணங்கற் சான்றிதழ் வழங்குதல்

இச் சான்றிதழ் ஏதேனும் கட்டிடமொன்று அங்கீகரிக்கப்பட்ட நிலஅளவை திட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காக வழங்கப்படுகின்றது. கட்டிடம் அமைக்கப்பட்டதன் பின்னர் அதில் குடியேறுவதற்கு முன்னர் பிரதேச சபையிடமிருந்து இதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்காக,

  • அலுவலகத்தில் (ரூ. 200.00/= + பெறுமதிசேர் வரி) பணம் செலுத்தி விண்ணப்பமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக கட்டிடத்தின் சதுர அடி அளவின் பிரகாரமும் ஒரு தொகை பணத்தைச் செலுத்த வேண்டும்.
  • ஒரு வருடத்தில் நிர்மாண பணிகளைப் பூர்த்திசெய்ய முடியாவிட்டால் காலத்தை நீடித்துக்கொள்ள வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் செல்லுபடியான காலம் 3 வருடங்களைக் கடந்திருந்தால் குறித்த அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் பிரதியொன்றுடன் புதிய விண்ணப்படிவத்துடன் மீண்டும் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப உத்தியோகத்தர் அல்லது பொது சுகாதார பரிசோதகர் பரிந்துரை செய்ததன் பின்னர் திட்டமில் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும்.
  • குழுவின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் இணக்கச் சான்றிதழ் வழங்கப்படும்.

சுதேச (ஆயுர்வேத) மருத்துவ சேவை வழங்கல்

ஹோமாகம பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும்பொருட்டு மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதிகளையும் மருந்துகளையும் வழங்கும் பொருட்டு ஹோமாகம பிரதேச சபை சுதேச(ஆயுர்வேத) மருத்துவ நிலையங்கள் சிலவற்றை ஆரம்பித்து நடாத்துகின்றது.

ஹோமாகம பிரதேச சபையின்மூலம் நடத்தப்படுகின்ற சுதேச மருத்துவ நிலையங்கள்

  • ஹோமாகம
  • வேத்தர
  • ஜம்புகஸ்முல்ல
  • விவசாய குடியேற்றத்திட்டம்
  • வெனிவெல்கொல
  • பிட்டிபன
  • பிராமணகம
  • மத்தேகொட
  • ஆரச்சிகொட

குப்பைகளை அகற்றுதல்

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் சேர்கின்ற குப்பை கூளங்களை அகற்றி பிரதேசத்தை தூய்மைப்படுத்துவதற்கும் துப்புரவேற்பாட்டைப் பேணுவதற்கும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களும் உழவு இயந்திரங்களும் (ட்ரக்டர்) பயன்படுத்தப்பட்டுள்ளன.

குப்பைகளைக் கொண்டு செல்தல்

இதன்போது பிரதேசசபை தலைவரிடம் முன்வைக்கின்ற கோரிக்கையுடன் தலைவர் / செயலாளர் அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கட்டிட திட்டங்களை அங்கீகரித்தல்

பிரதேச சபையினால் தமது அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து நிர்மாண நடவடிக்கைகளின் கட்டுப்பாடும் ஒழுங்குபடுத்தலும் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிரகாரம் ஹோமாகம பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுகின்ற அனைத்து நபர்களும் இப் பிரதேச சபையிடமிருந்து அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஹோமாகம பிரதேச சபை அதிகார பிரதேசம் 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் அச் சட்டதிட்டங்களின் பிரகாரம் நிர்மாண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்டிட திட்டங்களை அங்கீகரிக்கும் நடவடிக்கை

  • கட்டிட விண்ணப்ப படிவமொன்றை (ரூ. 300.00/= + பெறுமதிசேர் வரி) பணம் செலுத்தி பிரதேச சபை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் அங்கீகரிக்கப்படுவதற்குள்ள கட்டிடத்தின் வரைபடம், அதன் 3 போட்டோ பிரதிகள், அங்கீகரிக்கப்பட்ட காணி வரைபடம், காணி உறுதி என்பவற்றையும் கட்டிட பிரிவுக்கு வழங்கி கட்டிடத்தின் சதுர அடி அளவுக்கு ஏற்ப (இது தொடர்பான விபரங்கள் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) பணம் செலுத்தி பற்றுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் சபையின் தொழில்நுட்ப அதிகாரி/ பொது சுகாதார பரிசோதகர் குறித்த இடத்தைப் பரிசோதிப்பார். அத்துடன் அவர்களின் பரிந்துரையுடன் அக் கோவைகள் திட்டமிடல் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அனுமதி வழங்கப்படும்.
  • அங்கீகரித்த முத்திரையிடப்பட்டதன் பின்னர் குறித்த அங்கீகரித்த வரைபடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    (மேலதிக விபரங்கள் அவ் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது)

நீர்க் குழாய்களைப் பதிப்பதற்காக பாதைகளை அகழ்தல்

இதன்போது,

  • பிரதேச சபை செயலாளருக்கு விண்ணப்பப்படிவமொன்றைச் சமாப்பிக்க வேண்டும்.
  • நீர் வழங்கல் சபையின் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பரிந்துரையின் அடிப்படையில் குறித்த கட்டணம் அறவிடப்பட்டு அனுமதி வழங்கப்படும்.

சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுதல்

ஏதேனும் ஒரு பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரஙகள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் விதிக்கப்பட்டுள்ள சூழல் தரங்கள் பேணப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்வதற்காக இது இருக்கிறது. 2000.11.22ஆம் திகதியிட்ட 1159/22ஆம் இலக்க வர்த்தமானியின்மூலம் சூழலியல் அமைச்சர் ஒவ்வொரு பிரதேச சபை அதிகார பிரதேசத்திலும் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகளும் வியாபாரங்களும் இந்த அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பணிப்புரை வழங்கியிருக்கின்றார்.

சூழல் அனுமதிப்பத்திரத்தை வழங்கும் செயற்பாடு

  • சூழல் அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக்கொள்ளுவதற்கு முதலில் சூழல் பரிந்துரையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • சூழல் பரிந்துரையைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தை பிரதேச சபை அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • சூழல் பரிந்துரையைப் பெற்றுக்கொள்வதற்கு காணியின் அளவு 40 பர்ச்சசுக்கு குறைதலாகாது
  • கைத்தொழிலுக்கு முதலீடு செய்கின்ற பணத் தொகையின் பிரகாரம் செலுத்த வேண்டிய பரிசோதனைக் கட்டணம் வேறுபடும்.
  • அதன் பின்னர் அந்த விண்ணப்பப்படிவத்துக்கு சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் விசாரணை அறிக்கையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் சூழல் குழுவின் ஊடாக பரிந்துரை வழங்கப்படும்.
  • இந்த சூழல் பரிந்துரை ஒரு வருடத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும். அத்துடன் அதைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் சூழல் அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்க முடியும்
  • சூழல் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு ரூ.115.00 பணம் செலுத்தி விண்ணப்பப்படிவமொன்றைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
  • அத்துடன் அதற்பொருட்டு ஒழுங்காகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படித்துடன் காணி உறுதியின் பிரதி, காணியினதும் கட்டிடத்தினதும் அங்கீகரிக்கப்பட்ட அளவை சான்றிதழின் பிரதி, சூழல் பரிந்துரை என்பவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இதன்போது முன்போலவே சூழல் குழுவின் ஊடாக பரிந்துரை வழங்கப்படும்.
  • இந்த சூழல் பரிந்துரை 3 வருடத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும். ஆகவே 3 வருடங்கள் முடிவடைவதற்கு முன்னர் அதைப் புதுப்பிப்பதற்கு விண்ணப்பப்படிவமொன்றை ரூ.57.50 பணம் செலுத்தி கொள்வனவு செய்து அதை ஒழுங்காகப் பூர்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • அதன் பின்னர் மீண்டும் பரீட்சிக்கும் நடவடிக்கைகள் சபையின் வருமான பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் சூழல் குழுவின் ஊடாக புதிய சூழல் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

பிரதேச சபைக்கு உரிய விளையாட்டு மைதானங்களையும் மண்டபங்களையும் வாடகைக்கு கொடுத்தல்

இதன்போது குறித்த அதிகாரசபைகளின் அல்லது பொலிஸின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற எழுத்துமூல கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த கட்டணத்தை அறவிட்டு பிரதேச சபை தலைவரினால் அனுமதி வழங்கப்படும்.

පුරවැසි ප්‍රඥප්තිය

හෝමාගම ප්‍රාදේශීය සභාවේ පුරවැසි ප්‍රඥප්තිය             සිංහලපුරවැසි_ප්රඥප්තිය

காணித் துண்டுகளை அங்கீகரித்தல்

 

பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் மேற்கொள்ளப்டுகின்ற அனைத்து காணி அபிவிருத்தி மற்றும் காணிகளை துண்டுகாளாகப் பிரித்தல் என்பவை முதலில் பிரதேச சபையில் பதிவுசெய்யப்படுதல் வேண்டும். நகர பிரதேசங்களில் காணிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

தகைமைகள்

  • பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள துண்டுகளாகப் பிரிப்பதற்கு அல்லது அபிவிருத்தி செய்யப்படவுள்ள காணியின் உரிமையாளராக இருக்க வேண்டும்.
  • The owner should possess a registered deed.

காணி துண்டுகளை அனுமதிக்கும் நடவடிக்கை

  • காணி துணை பிரிப்பு விண்ணப்பப்படிவமொன்றை (ரூ.300.00/= + பெறுமதிசேர் வரி) பணம் செலுத்தி பிரதேச சபை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுதல்.
  • பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் அங்கீகரிக்கப்படவுள்ள காணியின் வரைபடம், அதன் 3 போட்டோ பிரதிகள்,  மூல திட்டங்களின் பிரதிகள், குறித்த காணி உறுதியின் பிரதி என்பவற்றைக் கட்டிட பிரிவுக்கு வழங்கி காணியின் துண்டுகளின் பிரகாரம் (இது பற்றிய விபரம் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) பணம் செலுத்தி பற்றுச் சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • அதன் பின்னர் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் காணியைப் பரிசோதிப்பார். அத்துடன் அக் கோப்புகளை திட்டமில் குழுவுக்கு சமர்ப்பித்ததன் பின்னர் அங்கீகாரம் அளிக்கப்படும்.
  • அங்கீகரிக்கப்பட்ட முத்திரை இடப்பட்டதன் பின்னர் குறித்த அங்கீகார திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    (மேலதிக விபரங்கள் அவ் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது)

மலம் அகற்றும் சேவை

இதன் கீழ் வீடுகள் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மலசலகூட குழிகளை வெறுமையாக்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்போது,

  • பிரதேச சபை செயலாளருக்கு விண்ணப்பப்படிவமொன்றைச் சமர்ப்பிக்கவேண்டும்.
  • பொது சுகாதார பரிசோதகரால் மதிப்பீடு செய்யப்பட்ட கட்டணத்தை அறவிட்டதன் பின்னர் பிரதேச சபை செயலாளரால் அங்கீகாரம் அளிக்கப்படும்.

நடப்பு சுகாதார சேவைகள் சம்பந்தப்பட்ட முக்கியமான கருத்திட்டங்களும் ஹோமாகம பிரதேச சபையினால் செயற்படுத்தப்படுகின்றது.

பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்

ஹோமகம பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் பொதுமக்கள் முன்வைக்கின்ற பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பில் அமைவிட விசாரணையை மேற்கொண்டு அப் பிரச்சினைகளையும் பிரதேச சபை தீர்த்துவைக்கின்றது.

வீதி, பொது இடங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் என்பவற்றுக்கு வீதி விளக்கு பொருத்துதல்

பிரதேச சபைக்கு உரிய வீதிகளில் விதி விளக்குகளைப்பொருத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை ஹோமாகம பிரதேச சபை மேற்கொள்கின்றது. இதன்போது பொதுமக்கள் வாய்மூலமாகவும் எழுத்துமூலமாகவும் முன்வைக்கின்ற கோரிக்கைள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

மயானம் மற்றும் தகனகூட சேவை

பிரதேச சபை அதிகாரபிரதேசத்தில் அனைத்து மயானங்களையும் பராமரிக்கின்ற பணிகளை பிரதேச சபை மேற்கொள்கின்றது.

  • தகனகூட சேவைகளை வழங்குகின்றபோது இறப்புச் சான்றிதழுடன் பிரதேச தலைவருக்கு முன்வைக்கின்ற எழுத்துமூல விண்ணப்பத்துடன் பிரதேச சபை செயலாளருக்கு விண்ணப்பமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • குறித்த கட்டணத்தை அறவிட்டதன் பின்னர் பிரதேச சபை தலைவரினால் அனுமதி வழங்கப்படும்.

மயானங்களில் நினைவு படிகங்களை அமைக்க அனுமதி வழங்குதல்

இதற்கு இறப்புச் சான்றிதழ், நினைவு படிகத்தின் வரைபடம், இறந்த நபர் அந்த பிரதேச சபை பிரதேசத்தில் வாழ்ந்த நபர் என்பதற்கான கடிதம் என்பவற்றுடன் விண்ணப்பப்படிவமொன்றை பிரதேச சபை செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். பொது சுகாதார பரிசோதகரின்/ தொழில்நுட்ப உத்தியோகதர்தரின் பரிந்துரையின்மீது அனுமதி வழங்கப்படும்.

හෝමාගම මූලික රෝහලට වෛද්‍ය උපකරණ තොගයක් පරිත්‍යාග කිරීම

මෙම වසරේදී හෝමාගම නගරය මුල් කර ගනිමින් පැවැති "බුද්ධ රශ්මි" පොසොන් කළාපය වෙනුවෙන් හෝමාගම ප්‍රාදේශීය සභාව මගින් ඉදි කරන ලද පොසොන් තොරණ සහ දන්සල සදහා ලද ආධාර මුදලින් ඉතිරි වූ රැපියල් ලක්ෂ හතක මුදලකින් හෝමාගම මූලික රෝහලට අත්‍යාවශ්‍ය වෛද්‍ය උපකරණ තොගයක් පරිත්‍යාග කිරීම 2023.08.21 දින එම වෛද්‍ය උපකරණ තොගය හෝමාගම මූලික රෝහල වෙත භාරදීම ප්‍රවාහන මහාමාර්ග සහ ජනමාධ්‍ය කැබිනට් අමාත්‍ය ආචාර්ය බන්දුල ගුණවර්ධන මහතා හා හෝමාගම ප්‍රාදේශීය සභාවේ ලේකම් කුමුදුනී ගුණතිලක ප්‍රමුඛ හෝමාගම ප්‍රාදේ2ශීය සභාවේ නිළදාරීන් විසින් එම රෝහලේ වෛද්‍ය අධිකාරී විශේෂඥ වෛද්‍ය ජයරැවන් බණ්ඩාර මහතා වෙත පරිත්‍යාග කරන ලදී. මෙම අවස්ථාවට වැඩ අධිකාරී ප්‍රමිල් දර්ශික සුරේන්ද්‍ර ,ප්‍රධාන ආදායම් පරීක්ෂක සුජීව පතිරණ ඇතුළු නිළදාරී පිරිසක් ද සහභාගී විය.